|
|
|||
|
||||
Overview'முருகன்' என்ற சொல் 'இளமையும் அழகுமுடையோன்' என்று பொருள்படும் 'என்று மிளையோய் நம' என்றவாறு எப்பொழுதும் எழிலுடையவனாய், நரை திரை மூப்பு பிணி சாக்காடு முதலிய துன்பங்கள் இல்லாதவனாய் விளங்கும் பெருந்தன்மை இறைவனுக்கே உளதாம். உயிர்கள் பிறப்பிறப் புடையனவாகலான் அவை என்றும் இளமையுடையனவல்ல. வீடு பெற்றோரும் வீடெய்துவதற்குமுன் மாறா இளமையுடையவரல்லராக லான் அவர்கள் கட்டும் வீடும் இல்லாத கடவுளைப்போல என்று மிளமை யடையவராகக் கருதப்படார். எஞ்ஞான்றும் நிலைத்த இளமையுடைமை போல இறைவன் என்றும் வாடாத அழகையுமுடையவன். காணப்படாத கடவுளைக் காணத்தக்க திருவுருவுடை யனாய்க் கருதி வழிபடும் மக்கள் அத்திருவுருவின் வைத்து அவன் பெருந்தன்மையை உணர்த்துங்கால் இளமை, அழகு முதலிய உருவச் சிறப்பினை விளக்குஞ் சொற்களை வழங்குதல் இயல்பே. ஐம்புலனுக்கும், உள்ளத்திற்கும் இன்பந் தரவல்ல இறைவன்றிரு வுருவினைச் சுட்டுவதற்கு 'முருகு' என்ற சொல்லிலும் சிறந்த மொழியில்லை. அச் சொல்லிற்கு அழகு தேன் மணம் இளமை கடவுட்டன்மை என்னும் பொருள்களுண்மையால், திருவுருவின் கண்கவர் வனப்பினையும், செவிக்கினிய தேன் போன்ற இன்சொல் லினையும், மூக்கிற்கு இனிமை பயக்கும் நறுமணத்தினையும், மெய்ந்நயந் தெரிக்கும் இளமையினையும், உள்ளத்தால் மதித்து வாயாரப் புகழ்தற்குரிய கடவுட்டன்மையினையும் ஒருங்கே அச்சொல் உணர்த்தி நிற்றல் காண்க. Full Product DetailsAuthor: K Subramania PillaiPublisher: Nilan Publishers Imprint: Nilan Publishers Dimensions: Width: 15.20cm , Height: 0.20cm , Length: 22.90cm Weight: 0.054kg ISBN: 9788199677098ISBN 10: 8199677090 Pages: 30 Publication Date: 01 January 2026 Audience: General/trade , General Format: Paperback Publisher's Status: Active Availability: Available To Order We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Tamil Table of ContentsReviewsAuthor InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |
||||