Overview
""இரணியன் இணையற்ற வீரன்"" என்னும் இந்நூலை நான் ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகட்கு முன் எழுதினேன். ஆத்திக நெருப்பில் துடித்த தமிழர் நெஞ்சுக்கு, ஏற்ற நீர்நிலையாயிற்று இரணியன். எதிர்பாராத பெரு வரவேற்புக் கிடைத்தது இரணியனுக்கு. அதுமட்டுமில்லை; அறிஞர் S.குருசாமியவர்கள் இரணியனை நாடக மேடைக்குக் கொண்டு வந்தார். தாமே இரணியனாக நடித்தார். அறிஞர் K.M.பால சுப்பிரமணியனார் முதலிய பலரையும் நடிக்கவும் வைத்தார். எண்ணியது வெற்றியடைந்தது. அன்றைய பிற்போக்குக் கருதிக் கலங்கிய தமிழரின் கலக்கத்தில் ஓர் அமைதியை நான் பார்த்தேன். மகிழ்ச்சிதான்! மற்றுமோர் பெரு மகிழ்ச்சி! இரணியன் நாடகம், நாடகம் எழுதும் இளைஞர்களை உண்டாக்கியது! நாடகங்களை எழுதிக் குவிக்கின்றார்கள். அந்நாடகங்கள் தமிழரின் மேலான கொள்கை களுக்குப் புறம்பான வழியிலும் செல்லுவன; தமிழின் உயர்வைப் புறக்கணிப்பன ஆயினும், நல்ல நாடகத்தைத் தேடும்படியான ஓர் ஆவலையாவது மக்களிடம் வளர்க்காமற் போகவில்லை. கேட்டும் கேளாமலும் இரணியனை அச்சிட்டு வெளியிட்டு, பெருவருவாய் கிடைக்கப்பட்டு மகிழ்ந்தவர் ஒருவரல்லர்; ஈ.வே.ரா. முதலிய பலர் என்பதை எண்ணுந்தோறும் எனக்கு மகிழ்ச்சி மிகும். இன்னும் இதுபோல் எழுதும் விருப்பம் தரும். என் மகிழ்ச்சி நூறு பங்கு உயர்த்தப்பட்டது ஒரே நேரத்தில். என் தோழர்களாலல்ல; ""இரணியனை நாடகமாக நடத்த வேண்டாம்"". இது ஆட்சியாளர் கட்டளை. எப்படி? இரணியனுக்கு ஒரே நேரத்தில் பதினாயிரக்கணக்கான தேவை ஏற்பட்டுவிட்டது. இரணியனை மீண்டும் அச்சிடுவதன் காரணமும் அதுதான்.
Full Product Details
Publisher: Nilan Publishers
Imprint: Nilan Publishers
Dimensions:
Width: 15.20cm
, Height: 0.70cm
, Length: 22.90cm
Weight: 0.177kg
ISBN: 9788198873637
ISBN 10: 8198873635
Pages: 126
Publication Date: 01 June 2025
Audience:
General/trade
,
General
Format: Paperback
Publisher's Status: Active
Availability: Available To Order

We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately.
Language: Tamil