|
|
|||
|
||||
Overviewஅந்தக் காலப் பக்கங்கள்' என்னும் நூல் வரிசையின் நான்காவது பாகம் இது. பழங்காலம் என்பது வெறும் கடந்து போன காலம் மட்டுமல்ல. அது நினைவுகளின் தொகுப்பு. நம் வரலாற்றின் ஆதாரம். பொக்கிஷங்களின் புதையல். அதை இந்தத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் சவாலான பணியைச் சுவாரஸ்யமாகச் செய்து வருகிறார் அரவிந்த் சுவாமிநாதன். அந்த வகையில் 'அந்தக் காலப் பக்கங்கள்' நூல் வரிசை தமிழ் எழுத்துலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இந்த நான்காம் பாகத்தில், மர்மமுகி அல்லது ரஸாயனக் கள்வன், கிழவனைக் குமரனாக்கும் மதன விநோத சிந்தாமணி லேகியம், பீடிச் சக்கரவர்த்தியும் ஐக்கிய முன்னணி பீடியும், காய கல்ப ரசம், அய்யர் செய்த மயிர் வளரும் தைலம் போன்ற சுவாரஸ்யமான வரலாற்றுப் பதிவுகளோடு, தமிழின் முதல் நாடகங்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் தொடர்பான முக்கியப் பதிவுகளையும் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். அத்தனை பதிவுகளுக்கும் அந்தக் காலப் பத்திரிகைகளில் இருந்தே ஆதாரத்தையும் படமாகக் கொடுத்திருப்பது சிறப்பு. Full Product DetailsAuthor: அரவிந்த் சுவாம , Aravind SwaminathanPublisher: Swasam Publications Private Limited Imprint: Swasam Publications Private Limited ISBN: 9788119550333ISBN 10: 8119550331 Pages: 154 Publication Date: 25 November 2023 Audience: General/trade , General Format: Book Publisher's Status: Active Availability: Available To Order We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Tamil Table of ContentsReviewsAuthor InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |
||||